யாழ்.கடற்றொழிலாளர்கள் ஆளுநரிடம் கையளித்த மனு
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Fisherman
By Dilakshan
சட்ட விரோத கடற்றொழில் தொழில் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநரிடம் வட மாகாண கட்றொழிலாளர் இணையம் தீவகப் பகுதி மீனவர் அமைப்புகள் இணைந்து மனுவொன்றை கையளித்துள்ளனர்.
குறித்த மனுவானது, இன்று மாலை கையளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் சட்டவிரோத இழுவை மடி தொழிலாளர்களால் அனலைதீவு மற்றும் எழுவைதீவு கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மனு கையளிப்பு
இதன் படி, இலங்கையின் கடல் தொழில் சட்டங்களை மீறி சட்டவிரோதமான இழுவை மடி தொழில் யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுப்பதை நிறுத்துமாறு கோரி வடமாகாண ஆளுநரிடம் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் யோன் போஸ்கோ எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் இணைந்து இந்த மனுவை கையளித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 20 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி