தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது
Ceylon Petroleum Corporation
Sri Lanka Politician
Arrest
By Pavi
தொழிற்சங்க செயற்பாட்டாளரான ஆனந்த பாலித்த, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (16.11.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்கியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆனந்த பாலித்தவிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்