20 வயதுக்கு மேற்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பு
sri lanka
pfizer vaccine
booster
By Vanan
20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவை செலுத்தி, மூன்று மாதங்கள் கடந்திருக்கும் பட்சத்திலேயே, பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள எந்தவொரு தடுப்பூசி நிலையங்களுக்கும் சென்று, பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும் எனவும்,
அஸ்ட்ராசெனகா − கொவிசீல்ட், சைனோபாம், மொடெர்னா மற்றும் ஸ்புட்னிக் ஆகிய எந்தவொரு தடுப்பூசியை செலுத்தியவர்களும், மூன்றாவது மருந்தளவாக (DOSE) பைசர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்