பிலிப்பைன்ஸ் தொடக்கப் பள்ளி கொடியேற்ற விழாவை உலுக்கிய நிலநடுக்கம்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
புதிய இணைப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் தொடர்பான அச்சமூட்டும் காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி பிலிப்பைன்ஸில் உள்ள அரச தொடர்க்கப்பள்ளி ஒன்றை நிலநடுக்கம் தாக்கும் காணொளி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அந்நாட்டின் மலிதா, கிலாலாக் கிராமத்தில் உள்ள மஹாயாஹாய் தொடக்கப் பள்ளியிலேயே இற்த பாதிப்பு நிகழ்ந்துள்ளது.
Watch | Philippines: Students and teachers at Mahayahay Elementary School immediately followed established earthquake safety protocols after a strong earthquake struck earlier today.
— United News of India (@uniindianews) June 8, 2026
According to the school administration, no injuries or damage have been reported. As a… pic.twitter.com/H3u3JFokQU
இன்ற காலை நடைபெற்ற கொடியேற்ற விழாவின் போது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவான நிலநடுக்கம் மாணவர்களையும் ஆசிரியர்களையும் உலுக்கியது.
காணொளியில் காணப்படுவது போல, மாணவர்களுக்குப் பின்னால் ஒரு சிறிய கட்டிடம் இடிந்து விழுகிறது.
முதலாம் இணைப்பு
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (08) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
More wild footage from today’s massive earthquake in the Philippines. pic.twitter.com/Cdylad2d7W
— Breaking911 (@Breaking911) June 8, 2026
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுனாமி எச்சரிக்கை
அதேநேரம் நிலநடுக்கத்தில் பல கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடலோரப் பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், "சம்பந்தப்பட்ட அனைத்து அரசு நிறுவனங்களையும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக" க் கூறியதோடு , மக்களை உயரமான இடங்களுக்குச் செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பிராந்தியத்தின் பல நாடுகள் சுனாமி எச்சரிக்கைகளை விடுத்திருந்தன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 14 மணி நேரம் முன்