பிலிப்பைன்ஸில் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி: இருவர் பலி
Philippines
World
By Laksi
பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் உள்ள கடற்படை தளத்தில் இடம்பெற்ற இராணுவ உலங்கு வானூர்தி (Helicopter) விபத்தில் சிக்கி 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
சாங்கி விமான நிலையத்தில் இருந்து இராணுவ பயிற்சிகளுக்காக கடற்படை தளத்துக்கு புறப்பட்ட உலங்கு வானூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கட்டுப்பாட்டை இழந்து விபத்து
இந்த உலங்கு வானூர்தி விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது, நிலைதடுமாறி கேவிட் சிட்டியில் உள்ள ஒரு சந்தைப்பகுதி அருகே உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து, இராணுவ பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி