பாகிஸ்தானில் 3 நாட்களுக்கு தொலைபேசி சேவை ரத்து
பாகிஸ்தானில் 3 நாட்களுக்கு தொலைபேசி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாடு நேற்று தொடங்கியது.
நாளை வரை நடைபெறும் இந்த மாநாட்டை சவுதி அரேபியா தலைமை தாங்கி நடத்துகிறது. மாநாடு நடைபெறும் 3 நாட்களும் இஸ்லாமாபாத்தின் முக்கியமான பகுதிகளில் தொலைபேசி சேவையை ரத்து செய்யுமாறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த மாநாட்டையொட்டி இஸ்லாமாபாத்தில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனினும் தொலைபேசி சேவை ரத்து விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது (Sheikh Rashid Ahmed) தெரிவித்துள்ளார்.
இதைப்போல பாகிஸ்தான் அரசு நாடாளுமன்றம் மற்றும் செனட் செயலகம் ஆகியவற்றை மூடியுள்ளது, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு வருகின்ற 20ம் திகதி வரை விடுமுறை அறிவித்து உள்ளது.