துமிந்த சில்வா - மகிந்தானந்தவின் சிறையறையில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசிகள்!
வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையின் K வார்டில் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அண்மையில் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
கையடக்கத் தொலைபேசிகள்
இந்த சோதனையின் போது அந்த வார்டில் 16 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் சிறைத்தண்டனை அனுபவிக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் சுமார் 150 கைதிகளுடன் குறித்த வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பூசா சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பான முதற்கட்ட விசாரணையை விரைவாக முடித்து அதன் முதற்கட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |