தங்க விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில் தங்க விலையில் இன்று (19.01.2025) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,660 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்
அதன்படி இலங்கையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 3000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 368,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேநேரம் 22 கரட் பவுண் தங்கத்தின் விலை 340,400 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதேவேளை 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |