ஊடகவியலாளர்களை கண்டு பயப்படும் பிள்ளையான்
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை கண்டு அஞ்சும் பிள்ளையான் தனது நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் கூட்டங்களை நடத்தி வருகின்றார்.
ஆயுதம் இருக்கும்போது தனக்கு எதிராக செயற்பட்டவர்களை கடத்தியும் காணமால் ஆக்கப்பட்ட வரலாறுகள் மட்டக்களப்பில் இருக்கின்றபோதும் தற்போது ஆயுத போராட்டம் மெளனிக்கபட்டதன் காரணமாக மாற்று வழியில் யோசித்து இருப்பதாக இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரகசிய தகவல்கள்
இன்று கிழக்கை மீட்போம் வடகிழக்கு இணையக்கூடாது எனும் நிலைப்பாட்டில்உள்ள பிள்ளையான் மக்கள் பிரச்சினைகளையும் சிங்கள பேரினவாதிகளினது செயற்பாடுகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களை கண்டு பயந்து ஓடுவதாக அறியமுடிகின்றது.
தமிழ் மக்களின் உரிமை மற்றும் தமிழர்களின் தீர்வு தொடர்பாக துணிகரமாக செயற்படும் ஊடகவியலாளர்கள் பிள்ளையானிடம் பல கேள்விகளை கேட்க விருந்தும் பயம் காரணமாக புறக்கணித்து வருகின்றார்.
இன்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை வழிநடத்தும் பொதுசன பெரமுன கட்சியின் எஜமான் பஷில் ராஜபக்ச படகில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
பிள்ளையாளின் கொலை கொள்ளை
மறுபுறம் அஹாத் மெளலானா பிள்ளையாளின் கொலை கொள்ளை தொடர்பாக பெரிய வாக்குமூலம் ஒன்றை ஜ.நா சபைக்கு வழங்கியுள்ளார் இந்த விடயங்கள் மக்கள் மத்தியில் இன்னும் சரியாக சென்றடையவில்லை.
இந்த விடயங்கள் தொடர்பாகவும் மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினை தொடர்பாகவும் அபிவிருத்தி நாயாகன் பிள்ளையானிடம் கேள்வி கேட்பதற்கு ஊடகவியலாளர்கள் தயாராக உள்ள நிலையில் அவர் ஊடகவியாலாளர்களை கண்டு பயந்து, தகவல் தெரிவிக்காமால் கூட்டங்களை நடாத்தி வருகின்றார்.
பதவிக்கும் பணத்துக்கும் சோரம் போகும் சில புலனாய்வு ஊடகவியலாளர்களை வைத்து கபடநாடகம் ஆடும் பிள்ளையான் முதுகெழும்பு இருந்தால் மட்டு.ஊடக அமையத்தில் வந்து மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என்கிற விமர்சனங்களும் சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.