ட்ரம்பின் முடிவால் இலங்கையில் நிர்க்கதியான 4000 பேர்
அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு வழங்கும் மேம்பாட்டு உதவியை நிறுத்த புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(donald trump) எடுத்த முடிவு, இலங்கையில் அந்த நிறுவனத்திடமிருந்து உதவி பெறும் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் 4,000 க்கும் மேற்பட்டோரின் வேலைகளை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
1961இல் ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடியின் நிர்வாகத்தின் போது நிறுவப்பட்ட USAID,நிறுவனம் பல்வேறு நாடுகளில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் மூலம் மனிதாபிமான உதவி, மேலாண்மை உதவி, வாழ்வாதார மேம்பாட்டு உதவி மற்றும் நிலைமாறுகால நீதி உதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவிகளை வழங்கியது.
இலங்கை பெற்ற உதவித் தொகை
1961 முதல் இன்று வரை இலங்கை பெற்ற உதவித் தொகை 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது தோராயமாக ரூ.350 பில்லியன் ஆகும்.
இருப்பினும், புதிய அரசாங்கத்தின் உதவி நிறுத்தப்பட்டதால் பல வளரும் நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |