நாடாளுமன்றில் சாணக்கியனைக் கேலி செய்த பிள்ளையான்
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியனை நோக்கி கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளின் பிரகாரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சாணக்கியனை விமர்சித்தல்
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த இரா சாணக்கியன், திரிப்பொலி பிளட்டூன் இராணுவப்படைபிரிவிற்கும் பிள்ளையானுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் பிள்ளையான் ஒரு கொலையாளி எனவும் தெரிவித்திருந்தார்.
இதன்போது குறுக்கிட்ட பிள்ளையான் சாணக்கியனை நோக்கி, ''பைத்தியக்காரன்'' என்றும் ''பைத்தியக்காரனுக்கு நேரம் கொடுத்தால் இவ்வாறு தான் பேசுவான்'' எனவும் ''போடா'' என்றும் கடுமையான வார்த்தைகளைக் கொண்டு உருவக்கேலி செய்தும் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)