சிஐடியில் முன்னிலையாகவுள்ள பிள்ளையானின் நெருங்கிய சகா : அம்பலமாகப் போகும் உண்மைகள்
பிள்ளையான் தொடர்பில் அவரது நெருங்கிய சகா ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு வாக்குமூலம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிள்ளையானுடன் கடந்த காலங்களில் ஒன்றாக இருந்து செயலாற்றிய குறித்த நபர் தானாக விரும்பி அரச சாட்சியாக இருந்து பிள்ளையான் தொடர்பான பல தகவல்களை வாக்குமூலமாக வழங்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக பிள்ளையான் தனக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து அழுது குளறவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு நடவடிக்கை
குறித்த விடயத்தை நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், பிள்ளையானின் சட்டத் தரணியான உதய கம்மன்பில தனது ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது போன்று பிள்ளையான் தனக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து அழுது குளறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்த அவர்கள் இருவருக்கிடையிலான கலந்துரையாடலின் போது கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புலனாய்வு அதிகாரிகள் நால்வரும் உறுதிப்படுத்தி உள்ளார்கள் என அவர் அறியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
