முன்னாள் அமைச்சர் ஒருவரின் மருமகனுக்கு பேரிடி! தொடரும் விசாரணை
நுகேகொடை - வாத்துவ பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து உரிமம் கொண்ட கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கியானது, ஒரு முன்னாள் அமைச்சரின் மருமகனுக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சம்பந்தப்பட்ட விடுதியின் மேலாளர் என்றும் அந்த விடுதி முன்னாள் அமைச்சரின் மருமகனுக்குச் சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவு
இதேவேளை, 29 வயதான சந்தேக நபரிடமிருந்து 85 கிராம் 'குஷ்' போதைப்பொருள் மற்றும் கைத்துப்பாக்கிக்கான 30 தோட்டாக்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர் ஜூலை 14 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறானதொருபின்னணியில், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி அனுமதியின்றி எதற்காக கைமாற்றப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கி உரிமத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சந்தேக நபருக்கு போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்பு இருப்பதாகவும் நம்பப்படுவதாகவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்