சி.ஐ.டி யில் முன்னிலையான பியூமி ஹன்சமாலி
தென்னிலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி குற்றவியல் விசாரணைகள் பிரிவில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குற்றவியல் விசாரணைகள் பிரிவிலிருந்து நீண்ட நேரத்தின் பின்னர் வெளியே வந்த பியூமி ஹன்சமாலி ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, குற்றவியல் விசாரணை பிரிவில் தனது தனிப்பட்ட பிரச்சினை தொடர்பில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததாகவும் பியூமி ஹன்சமாலி சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடரும் விசாரணைகள்
தனது தனிப்பட்ட காரணத்திற்கான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்கே பல மணி நேரம் எடுத்ததாகவும், தனக்கெதிரான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று வழங்கிய முறைப்பாடு தொடர்பில் எதிர்காலத்தில் விரிவான விபரங்களை வெளிப்படுத்துவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு (Piumi Hansamali) எதிராக 289 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமான வரி செலுத்தாமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருமான வரியை பியூமி ஹன்சமாலி செலுத்துவதைத் தவிர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறுகிய காலத்தில் மில்லியன் கணக்கான சொத்துகளைச் சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
