வெளியே வந்தார் பியூமி ஹன்சமாலி! கொழும்பில் வைத்து எடுக்கவுள்ள அடுத்த நடவடிக்கை
தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறி கொழும்பில் உள்ள சொகுசு ஹோட்டலில் பிறந்தநாள் விழாவை நடத்திய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட அழகுக் கலை நிபுணர் சந்திமல் ஜெயசிங்க மற்றும் பிரபல நடிகையும், மாடலுமான பியூமி ஹன்சமாலி ஆகியோர் இன்று (17) தனிமைப்படுத்தல் பணிகளை முடித்து வீடு திரும்பியுள்ளனர்.
பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட குறித்த குழு பசறை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறி கொழும்புக்கு திரும்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் வந்த பிறகு மனித உரிமைகள் ஆணையத்தில் எழுத்து பூர்வமாக முறைப்பாடு ஒன்றை கையளிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட போதிலும், அவர்களின் அடிப்படை உரிமைகள் பொலிஸாரினால் மீறப்படுவதாக குற்றம் சாட்டி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.