ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க திட்டம்: தேர்தல் தோல்விக்கு பின்னர் ட்ரம்பின் எச்சரிக்கை
ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க வேண்டியிருக்கலாம் என்றும், அதுபற்றி விரைவில் தெரியவரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்தானது சர்வதேசத்தின் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.
அமெரிக்காவில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இன்னும் முடிவுக்கு வராத போர்
“தற்போது நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். நாம் மேலும் ஒரு படி சென்று, இது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்று சான்றளிக்க வேண்டுமா?"
முடிந்தால், ஈரானின் மற்ற பகுதிகளை நான் அழிக்க விரும்பவில்லை, ஆனால் ஒருவேளை நான் அதைச் செய்ய வேண்டியிருக்கும். அது உங்களுக்கு விரைவில் தெரிந்துவிடும்," என்று அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெப்ரவரியில் தொடங்கி இன்னும் முடிவுக்கு வராத, ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போருக்குப் பிறகு, அந்நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படுவதற்கு 25 ஆண்டுகள் ஆகும் என்று தாம் கருதுவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தின் எதிர்காலம் குறித்து மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிற்கு ஒரு முன்மொழிவை அனுப்பியதாகவும், இதில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்கப்பட்டபோது, ட்ரம்ப், “தங்கள்ஒப்புதல் இல்லாமல் அவர்கள் எதுவும் செய்யமுடியாது” என்று பதிலளித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |