கோட்டாபயவை தீ வைத்துக் கொல்ல திட்டம்..! வெளியான பகீர்த் தகவல்
Gotabaya Rajapaksa
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Kiruththikan
திட்டம்
கோட்டை அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்த போது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கோட்டாபயவை கொல்லும் திட்டம்
அத்தோடு, கோட்டை அதிபர் மாளிகை, மற்றும் அலரி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்து அவற்றை ஆக்கிரமித்திருந்தனர்.
இதன்போதே முன்னாள் அதிபர் கோட்டாபயவை கொல்லும் திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்