அமெரிக்காவில் வானிலிருந்து திடீரென கீழே விழுந்த விமானம்
அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானமொன்று கீழே விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
Van's RV-10 வகை சிறிய விமானம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (03) லாஸ் ஏஞ்சலஸுக்கு வடமேற்கே 50 மைல்கள் தொலைவில் உள்ள சிமி வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குடியிருப்பு பகுதி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துள்ளது.
இந்த விபத்தில் விமானி உயிரிழந்த நிலையில், இரண்டு வீடுகள் தீக்கிரையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள்
தீயணைப்பு படை வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் விமானம் விழுந்த வீடுகளில் இருந்த பொதுமக்களை உடனடியாக வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
