அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விமானம்! வெளியாகிய அதிர்ச்சி காணொளி
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மெரிட் தீவு நெடுஞ்சாலையில் அவசரமாக திடீரென தரையிறங்கிய சிறிய ரக விமானம் கார் மீது மோதிய காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மெரிட் தீவுப் பகுதியில், இன்டர்ஸ்டேட்-95 நெடுஞ்சாலையில் திங்கட்கிழமை மாலை 5:45 மணியளவில் குறித்த விபத்தது இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் புளோரிடாவில் பீச்கிராஃப்ட் 55 (Beechcraft 55) ரக சிறிய விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதன் இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
🚨 Breaking News — Florida Incident 🚨
— BUZZ MAGNET 🧲 (@_buzz_magnet_) December 10, 2025
A small aircraft was forced to make an emergency landing on a Florida highway after suffering an engine failure, striking a Toyota Camry in the process. The incident occurred near Cocoa in Brevard County around 5:45 p.m.
The 27-year-old… pic.twitter.com/A95OdLDItX
வேகமாக மோதிய காணொளி
இந்நிலையில் தரையிறங்க முயன்றபோது, வீதியில் சென்று கொண்டிருந்த கார் மீது வேகமாக மோதிய காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தால் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், விமானத்தில் இருந்த 27 வயது விமானி மற்றும் 27 வயதுடைய பயணி இருவருக்கும் உடல் சேதங்கள் இன்றி தப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், காரை செலுத்திய 55 வயது பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |