விழுந்து நொறுங்கிய விமானம்: அரசியல்வாதி உட்பட 15 பேர் பலி
கொலம்பியாவில் (Colombia) சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 15 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.
புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 12:05 மணிக்கு (17:05 GMT) வெனிசுலா எல்லைக்கு அருகிலுள்ள ஒகானா நகரில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த விமானத்துடனான தொடர்பு 11 நிமிடங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீச்கிராஃப்ட் 1900 இரட்டை எஞ்சின் டர்போபிராப் கொண்ட இந்த விமானம், 13 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்களுடன் விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவரும் உயிர் பிழைக்கவில்லை
விமானத்தில் அந்நாட்டு அரசியல்வாதியான டையோஜெனெஸ் குயின்டெரோ (Diogenes Quintero) மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
Colombia’s civil aviation authority says a plane carrying 15 people, including a lawmaker, crashed near the Venezuelan border, killing everyone on board.
— PressTV Extra (@PresstvExtra) January 29, 2026
Follow: https://t.co/7Dg3b41PJ5 pic.twitter.com/KqCcAxECVE
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அந்நாட்டுத் தேர்தலில் அவர் போட்டியிடத் தயாராக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
"டியோஜெனெஸ் குயின்டெரோ தனது பிராந்தியத்திற்கு அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு தலைவராக இருந்தார், சேவைக்கான உறுதியான அழைப்பு மற்றும் பொதுப் பொறுப்பின் ஆழமான உணர்வுடன் இருந்தார்" என்று கொலம்பியாவின் யு கட்சி கூறியது.
மீட்புக் குழுவினர் விமானம் விழுந்த இடத்திற்கு மிக விரைவாகச் சென்றபோதிலும், விபத்தில் சிக்கிய எவரும் உயிர் பிழைக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |