தெற்கு அவுஸ்திரேலியாவில் விழுந்து நொருங்கியது விமானம் : பயணித்தவர்களின் நிலை...!
Australia
Plane Crash
Death
By Jaso
தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பாராஃபீல்ட் விமான நிலையத்தில், ஒரு சிறிய ரக விமானம் ஓடுபாதையில் விழுந்து நொருங்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், பத்துபேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கியது, இரண்டு என்ஜின்கள் கொண்ட 'டயமண்ட் DA42' என்ற சிறிய விமானம் எனக் கூறப்படுகிறது.
விபத்தை அடுத்து தீ பிடித்த விமானம்
விபத்திற்குப் பிறகு விமானத்தில் தீப்பிடித்ததாகவும், தற்போது தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

image credit -bbc
இதற்கிடையில், விபத்து காரணமாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் சிறப்பு விசாரணை ஒன்றைத் தொடங்கியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்