மேலெழும்பத் தயாரான விமானம் தீடீர் விபத்து - அலறிய பயணிகள்; பெருவில் பயங்கரம்!

Plane Crash South Africa
By Kalaimathy Nov 19, 2022 07:17 AM GMT
Report

தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் உள்ள விமான நிலைய ஓடு பாதையில் ஏர்பஸ் விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்பஸ் ஏ320 என் விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறப்பதற்கு தயாரான நிலையிலேயே இந்த விமானம் ஓடுபாதையில் நிறுத்தி வைக்ககப்பட்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து மேலும் தெரியவரகையில், 

பெரு நாட்டின் ஏர்பஸ் ஏ320 என்ற விமானமானத்தில் 102 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில், விமானம் ஓடு பாதையில் இருந்து மேலே எழும்புவதற்காக வேகமாக சென்றுள்ளது.

திடீர் விபத்து

மேலெழும்பத் தயாரான விமானம் தீடீர் விபத்து - அலறிய பயணிகள்; பெருவில் பயங்கரம்! | Plane Hits Vehicle On Runway Limas Airport World

அப்போது திடீரென்று அங்கிருந்த தீயணைப்பு வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. வாகனம் மீது மோதிய வேகத்தில் விமானத்தின் பின்புறம் தீப்பிடித்தது.

இதனால் விமானத்தை விமானிகள் நிறுத்த முயற்சித்தனர். ஓடு பாதையில் விமானம் தீப்பொறிகள் பறந்தபடியும், கரும்புகை வெளியேறியவாறும் பல அடி தூரம் சென்று நின்றது. இதன் போது விமானத்தில் இருந்த பயணிகள் பீதியில் அலறினார்கள். 

உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விமானத்தில் பற்றிய தீயை அணைத்தனர். அதனையடுத்து விமானத்துக்குள் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விசாரணை

மேலெழும்பத் தயாரான விமானம் தீடீர் விபத்து - அலறிய பயணிகள்; பெருவில் பயங்கரம்! | Plane Hits Vehicle On Runway Limas Airport World

இந்த விபத்தில் தீயணைப்பு படையைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறும்போது, "விமானம் ஓடு பாதையில் புறப்பட்ட போது தீயணைப்பு வாகனத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். பயணிகள், விமான ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026