பிளாஸ்டிக் பொம்மைகளால் விபரீதம் - வெளியாகியுள்ள எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
பிளாஸ்டிக் பொம்மைகள் குழந்தைகளுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், பிளாஸ்டிக் பொம்மைகள் விற்பனையை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் தவிர, இந்த பொம்மைகளில் கன உலோகங்கள் கொண்ட பல்வேறு வகையான வண்ணப்பூச்சுகளும் உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சரோஜனி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்களை பாவிப்பதால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி