ரணிலுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழி(படம்)
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டொக்டர் அலகா சிங், இன்று (மே 24) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து, இலங்கையின் தற்போதைய மருந்துப் பொருட்களுக்கான நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இலங்கையின் பூரண ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையானது ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதில் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக டொக்டர் அலகா சிங் மேலும் தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கான தனது உதவித் திட்டத்தின் முதல் கட்டமாக 2 மில்லியன் டொலர்களை சுகாதார சேவைக்காக வழங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
சுகாதார காப்புறுதியில் இலங்கையையும் இணைத்துக்கொள்ள எண்ணியுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியை கோரியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா
