வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டம்: T-56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Central Bureau of Investigation Gun Violence
By Pavi Oct 20, 2026 08:19 AM GMT
Report

அங்குருவாதொட்ட பகுதியில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர், T-56 ரக துப்பாக்கியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள வெல்லே சாரங்க என்ற குற்றவாளியின் வழிநடத்தலின் கீழ், குறித்த கொலையை மேற்கொள்ள சந்தேகநபர் தயாராகியிருந்ததாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்குருவாதொட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு வருவதாகப் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல்!

கொலைத் திட்டத்துக்குக் காரணம்

இதனையடுத்து, பல நாட்களாக இரவு பகலாக முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் பின்னர், விசாரணை அதிகாரிகள் சந்தேகநபரை அவர் வசிக்கும் வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டம்: T-56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது | Plot To Murder A Businessman Suspect Arrested

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அவரது வீட்டுக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி, அதற்கான மகசின் மற்றும் 16 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள வெல்லே சாரங்க என்ற குற்றவாளியின் வழிநடத்தலின் கீழ், குறித்த வர்த்தகரைக் கொலை செய்யச் சந்தேகநபர் திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வர்த்தகரின் தொழிற்சாலையில் இருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களை வெல்லே சாரங்க தரப்பினருக்கு வழங்க மறுத்தமையே இந்தக் கொலைத் திட்டத்துக்குக் காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், மீட்கப்பட்ட துப்பாக்கி களுத்துறை பகுதியில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுக்காக நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், லலித் கன்னங்கர எனப்படும் 'பஸ் லலியா' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் தரப்பினரும் இந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேகநபரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் litro எரிவாயு தட்டுப்பாடு..! அடுத்தடுத்து நாட்டுக்கு வரும் கப்பல்கள்

இலங்கையில் litro எரிவாயு தட்டுப்பாடு..! அடுத்தடுத்து நாட்டுக்கு வரும் கப்பல்கள்

நாடு முழுவதும் இன்றும் ஒரு மணிநேர மின்வெட்டு : வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் இன்றும் ஒரு மணிநேர மின்வெட்டு : வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024