பாஜக வெற்றிக்காக விரலை வெட்டி காணிக்கை: இளைஞனின் விபரீத செயல்
புதிய இணைப்பு
இந்திய தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர் ஒருவர் தன்னுடைய கைவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சத்தீஸ்கரில் வசிக்கும் துர்கேஷ் பாண்டே (வயது 30) என்ற இளைஞனே காளி கோயிலுக்கு சென்று தனது இடது கை விரலை வெட்டி காணிக்கை செலுத்தி உள்ளார்.
இந்நிலையில், கையில் இருந்து ரத்தம் வழிந்து ஓட, வலியால் துடிதுடித்த துர்கேஷ் பாண்டேவை அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
புதிய பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi) இன்று (08) பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பதவியேற்பு 09ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சந்திர பாபு நாயுடு (N. Chandrababu Naidu) தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் நடவடிக்கைகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வழங்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் 07 அமைச்சரவை அமைச்சு பதவிகளையும், சபாநாயகர் பதவியையும் தெலுங்கு தேச கட்சி கோரியிருந்தது.
ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை
மக்களவைத் தேர்தல் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது.
இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
இதனால் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர்.
பதவிப் பிரமாண நிகழ்வு
நேற்றிரவு தெலுங்கு தேசம் கட்சிக்கும் பாஜகவுக்கும் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பதவிப் பிரமாண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |