பிளவுபட்டது மொட்டு : கடும் நெருக்கடியில் ராஜபக்சாக்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்காமல் தனி வேட்பாளரை முன்வைக்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை தீர்மானித்துள்ள நிலையில், கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை முன்னிறுத்த தீர்மானித்ததையடுத்து, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa), சமல் ராஜபக்ச(Chamal Rajapaksa), பசில் ராஜபக்ச(basil rajapaksa), நாமல் ராஜபக்ச(namal rajapaksa), ஷசீந்திர ராஜபக்ச(Shashindra Rajapaksa), நிபுன ரணவக்க(Nipuna Ranawaka) ஆகியோர் பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு இல்லாத தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
கட்சியில் ஏற்பட்டுள்ள ஒழுங்கீனம்
வரும் நாட்களில் கட்சி அமைப்புகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அணி மாற்றங்கள்
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை முன்னிறுத்த தீர்மானித்துள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளும் கடும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதோடு, அவர்களும் எதிர்வரும் நாட்களில் தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவுள்ளனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை முன்னிறுத்த தீர்மானித்துள்ள நிலையில், தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் தமது பலத்தை வெளிப்படுத்தும் நோக்கில் எம்.பி.க்கள் இடையே பல அணி மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |