தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்: கனடாவிலிருந்து பறந்த அறிக்கை
தமிழ் இனப்படுகொலையை ஒருபோதும் மறக்கக்கூடாது என கனடாவின் (Canada) கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லீவ்ரே (Pierre Poilivre) தெரிவித்துள்ளார்.
கருப்பு ஜூலையின் 42ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ இலங்கையின் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் குழந்தைகள் உட்பட பல தமிழ் மக்களின் எச்சங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
இனப்படுகொலை
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களின் ஒரு சிலிர்க்க வைக்கும் நினைவூட்டலாக இந்த கண்டுபிடிப்புக்கள் உள்ளன.
தமிழ் இனப்படுகொலையை ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதோடு தமிழ் கனடியர்களுடன் ஒற்றுமையை வலியுறுத்தி நீதிக்காக குரல் கொடுப்போம்.
எனது தலைமையில் உள்ள கன்சர்வேடிவ் கட்சி, எப்போதும் தமிழ் இனப் படுகொலையை அங்கீகரிக்கும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
