பிரபல நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட பாலில் நஞ்சு - 12 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதி
Kilinochchi
Sri Lanka
Northern Province of Sri Lanka
By pavan
கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள தனியார் முன்பள்ளி ஒன்றில் பதப்படுத்தப்பட்ட பாலில் நஞ்சூரியமையால் 12 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துட்டும் திட்டத்தினூடாக நிறுவனமொன்று பதப்படுத்தப்பட்ட பால் வழங்கப்பட்டது.
அவ் பால் வழங்கியதையடுத்து மாணவர்கள் முன்பள்ளியில் வைத்து சத்தியெடுத்தனர்.
பாலின் மாதிரிகள்
இதனையடுத்து மாணவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அங்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதன்போது மாணவர்களுக்கு வயிற்றோட்டம் வாந்தி ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாலின் மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி