ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்துவோருக்கு எதிராக காவல்துறையின் நடவடிக்கை
அனுராதபுரம் - நவகத்தேகமவில் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நவகத்தேகம - ஆனமடுவ சாலையில் இரண்டு இளைஞர்கள் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் சென்று வாகனங்களுக்கு இடையூறாக நடந்து செல்வது அந்த காணொளியில் காட்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசாரணை
விசாரணைகளைத் தொடர்ந்து, நவகத்தேகம காவல் நிலைய அதிகாரிகள் நேற்று(08.03.2026) மோட்டார் சைக்கிளுடன் சாரதியைக் கைது செய்தனர்.

நவகத்தேகமவைச் சேர்ந்த சந்தேக நபர், பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், சாலைப் பயனாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் மற்றும் குற்றவியல் கொலைக்கு முயற்சித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.
அவர் இன்று ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, நவகத்தேகம காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |