யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதி : அதிகாரத்தினை மாகாணத்திற்கு கோரினார் சிறீதரன்

Sri Lanka Army Sri Lanka Police Jaffna S Shritharan
By Vanan Oct 26, 2023 07:11 AM GMT
Report

யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது இவ்வாறு தெரிவித்தார்.

எதற்கு எடுத்தாலும் இராணுவம்

மேலும் கருத்து தெரிவித்த அவர், அண்மைய நாட்களில் காவல்துறையினரின் செயற்பாட்டினை பார்க்கும்போது எதற்கு எடுத்தாலும் இராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றார்கள்.

திருகோணமலையை பௌத்த மாவட்டமாக மாற்ற துரித நடவடிக்கை : அரச அதிகாரிகளும் துணையாம்

திருகோணமலையை பௌத்த மாவட்டமாக மாற்ற துரித நடவடிக்கை : அரச அதிகாரிகளும் துணையாம்

யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதி : அதிகாரத்தினை மாகாணத்திற்கு கோரினார் சிறீதரன் | Police Action In Jaffna District Is Slow Sridharan

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அதாவது இராணுவத்தினை யாழில் தொடர்ச்சியாக இங்கே நிலைநாட்டுவதற்காகக் கூட இந்தச் செயற்பாடுகள் அமைந்திருக்கலாம்.

கொழும்பில் அதிபருக்கு எதிராக ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டால் உடனே கைது செய்கின்றார்கள். போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள் ஆனால் யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தும் வகையில் பட்டப்பகலில் கூடி கேக் வெட்டியவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் இன்று வரை 8 பேரை மட்டுமே கைது செய்துள்ளார்கள்.

காவல்துறையினரின் செயற்பாடு 

இதிலிருந்து எமக்கு ஒன்று புரிகின்றது. காவல்துறையினரின் செயற்பாடு மிக மந்தகதியில் உள்ளது.

யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதி : அதிகாரத்தினை மாகாணத்திற்கு கோரினார் சிறீதரன் | Police Action In Jaffna District Is Slow Sridharan

அதாவது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை நிலை நாட்டுவதற்காகவே காவல்துறையினர் இவ்வாறு செயற்படுகிறார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறை அதிகாரம்

காவல்துறையினரால் சிவில் நிர்வாகத்தினை திறமையாக செயல்படுத்த முடியவில்லை என கருதினால் காவல்துறை அதிகாரத்தினை மாகாணத்திடம் தாருங்கள்.

கனடாவில் வேலைவாய்ப்பு : இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில் கைது

கனடாவில் வேலைவாய்ப்பு : இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய பிரதான சூத்திரதாரி இந்தியாவில் கைது


முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா கூட நீண்ட நாட்களாக கோரிக்கையினை முன்வைத்து வருகின்றார்.

காவல்துறையினரால் சிவில் நிர்வாகத்தினை கட்டுப்படுத்தி செயற்படுத்த முடியா விட்டால் அதனை எங்களிடம் தாருங்கள்" என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026