பொதுமக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
Sri Lanka Police Investigation
Sri Lankan political crisis
By Kiruththikan
நாடு முழுவதும் கடத்தல், வழிப்பறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துப்பாக்கிச்சூடு, என மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு பகுதிகளிலும் காவல்துறையினர் ஒலிபெருக்கி ஊடாக பொது மக்களை எச்சரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
காவல்துறையினரால் விடப்பட்டுள்ள வேண்டுகோள்கள்....
- வீடுகளில் இருக்கும் மக்கள் கதவு, ஜன்னல்களை பூட்டி வீட்டிற்குள் அவதானமாக இருக்கவும்.
- வாகனங்கள் தொடர்பிலும் அவதானமாக இருக்கவும்.
- வெளிநபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம்.
- உதவி கேட்டு, மின்சார தடை தொடர்பில், அல்லது அதிகாரிகள் என கூறி வீடுகளுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்.
- நகைகள் அல்லது பெறுமதியான பொருட்களுடன் வெளியே நடமாடுவதனை தவிர்க்க வேண்டும்.
- இரவு நேரத்தில் வீடுகளின் பாதுகாப்பினை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
- கையடக்க தொலைபேசியின் EMI இலக்கத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
- வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள் அவதானமாக இருங்கள்.
- உங்களுக்கு பெறுமதியான பரிசு வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறி வரும் நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.
- பேருந்துகளில் புதிய நபர்கள் பழக்கம் ஏற்படுத்த முயற்சித்தால் அதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
- பேருந்தில் பைகள் வழங்கினால் பெற்றுக் கொள்வதனை தவிர்த்து அவதானமாக இருங்கள்.
நீங்கள் ஏமாற்றப்படலாம். ஏமாற்றுக்காரர்களினால் குறி வைக்கப்படலாம் என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

