பாடசாலை மாணவர்களை குறிவைக்கும் ஆசாமிகள் : உன்னிப்பாக கண்காணிக்கும் காவல்துறை
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை காவல்துறையினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், குறிப்பாக பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய், இனிப்புவகை, பிஸ்கட் மற்றும் சாரவிட ஆகியவற்றுடன் 'மாவா' மற்றும் 'பாபுல்' போன்றவற்றை மறைத்து விற்பனை செய்யும் முறை காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இதுவரை கைதான சந்தேக நபர்கள்
இதுபோன்ற வணிகர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பான சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த விஷயத்தில் யாரும் தப்ப முடியாது என்றும் அவர். வுட்லர் கூறினார்.
மரண தண்டனைக்குரிய குற்றம்
அதன்படி, 5 கிராமுக்கு மேல் கொக்கைன், ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றை வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தங்கள் அன்புக்குரியவர்கள் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு ஆளாகுவதற்கு முன்பு, தங்கள் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடக்கும் எந்தவொரு சம்பவம் குறித்தும் தகவல்களை வழங்குவது பொதுமக்களின் பொறுப்பாகும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |