காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது
Jaffna
Drugs
Arrest
By Kajinthan
யாழ்ப்பாணம்,சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் (28)கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சுன்னாகம் காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்