பயணத்தடை மீறல் - மாட்டு வண்டியில் பயணித்த நால்வரை கைது செய்தது பொலிஸ்
'தெங் செப்பத' - இப்போது சுகமா? என்று எழுதப்பட்ட பாதாதையுடன் மாட்டு வண்டியில் சென்ற நால்வர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து இவர்கள் மாட்டு வண்டியில் சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரில் ஐக்கிய இளைஞர் சக்தியின் காலி மாவட்ட அமைப்பாளரும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
மாகொல்ல பாலத்தில் இருந்து காலி நகர் நோக்கி பயணித்த போதே மாட்டு வண்டியுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பயணத்தடை கட்டுப்பாட்டை மீறியதால் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் இவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
I am at Galle Police for protesting against #FuelPriceHike in Galle. We as @sjbsrilanka will NOT let the government suppress the people under the pretext of #TravelRestrictions ! We are not afraid of repression. #SriLanka #SLnews pic.twitter.com/Kvkkey0xpR
— Kanishka De Lanerolle (@K_DeLanerolle) June 19, 2021