யாழில் மாடுகளை கடத்திய நபர் அதிரடி கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ்ப்பாணம் - அச்சுவேலி காவல்துறை பிரிவிற்குட்பட்ட வீரவாணி பகுதியில் மாடுகளை கடத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய காவல்துறை அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் காங்கேசனதுறை குற்ற தடுப்பு பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (27.02.2026) முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் நீண்ட காலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் சிறிய ரக வாகனம் ஒன்றில் ஒன்பது மாடுகளை கடத்தி சென்ற வேளை மாடுகளை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றில் முற்படுத்தல்
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கடத்தப்பட்ட மாடுகளுடன் அச்சுவேலி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் நாளைய தினம் (28) மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |