காவல்துறை அதிகாரிக்கு எதிராக புகார்! புகார் தெரிவித்தவரை கைது செய்த காவல்துறையினர்
மட்டக்களப்பு ஏறாவூர் காவல் நிலையத்தில் கடமையாற்றிய காவல்துறை அதிகாரியின் குற்றச் செயலுக்கு எதிராக முறைப்பாடு செய்த ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த நபரை போதைவஸ்து குற்றச்சாட்டில் கைது செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவில் உள்ள அப்துல் ஹமீது ரகுமத்துல்லா என்ற நபரின் காணிக்குள் அடைக்கப்பட்டிருந்த தகரம் மற்றும் வேலிகட்டைகளை கணிப் பிணக்கு விசாரணைக்காக வந்த ஏறாவூர் சிறுகுற்றப் பிரிவு காவல்துறை அதிகாரி ஒருவர் வாகனத்தில் ஏற்றிச் சென்று அதனை நீதிமன்றத்தில் பாரப்படுத்தாது தங்களது சொந்தத் தேவைக்கு பயன்படுத்தி உள்ளார்.
காவல்துறை அத்தியட்சகருக்கு முறைப்பாடு
இதனை அறிந்த பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு முறைப்பாடு வழங்கியதை அடுத்து, குறித்த ஏறாவூர் காவல்துறை அதிகாரியை விசாரணையின் பொருட்டு சிறு குற்றப் பிரிவு அதிகாரியாக இருந்தவரை போதைவஸ்து பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் காவல்துறை அதிகாரிக்கு எதிராக சிரேஸ்ட காவல்துறை அதிகாரிக்கு புகார் வழங்கிய நபரை நேற்றைய தினம்(11) தொலைபேசி ஊடாக பிணை ஒன்றிற்காக அழைக்கப்பட்டு அவர் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளதோடு அவரை காவல்துறையினர் மிக மோசமாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து கைது செய்யப்பட்டவரின் மனைவியான நூர்ஜஹான் கூறியதாவது,
எனது கணவரான அப்துல் ரகுமான் ஏறாவூர் காவல்துறை அதிகாரிக்கு எதிராக கொடுத்த முறைப்பாடு காரணமாக அவர் போதைவஸ்து பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் தற்போது போதைவஸ்து பிரிவின் பொறுப்பதிகாரியாக உள்ள குறித்த காவல்துறை அதிகாரி எனது கணவரை பழிவாங்கும் நோக்குடன் அவர் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாக பொய்யான குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.
போதைப்பொருள் வழக்கு
நண்பர் ஒருவர் ஊடாக பிணை எடுப்பதற்காக காவல் நிலையம் வருமாறு தொலைபேசி ஊடாக எனது கணவரை அழைத்து அவர் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அவர் தொலைபேசியில் பேசிய ஒலிப்பதிவுகள் உண்டு. ஆனால் அவரை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாது அவரை மிக மோசமாக தாக்கியுள்ளனர்.
அவர் மிகவும் காயமடைந்துள்ளார். நாங்கள் இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடத் தயாராக உள்ளோம். திட்டமிட்டு எனது கணவரை பழிவாங்கும் நோக்குடன் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
இவ்வாறான காவல்துறையினர் மீது உரிய விசாரணை நடாத்தி உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” - எனக் கூறினார்.





நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
