கத்தோலிக்க பாதிரியாரை தாக்கிய காவல்துறை: நீதிமன்றின் அதிரடி உத்தரவு!
Sri Lanka Police
Law and Order
NPP Government
By Kanooshiya
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பேர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (26.01.2026) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உத்தரவு
மேலும், எதிர்வரும் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கத்தோலிக்க பாதிரியார் உத்தரவை மீறி, தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காவல்துறையினரின் குறித்த நடவடிக்கை தொடர்பில் கத்தோலிக்க பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
9ம் ஆண்டு நினைவஞ்சலி