பாரியளவான போதைப்பொருளுடன் பொலிஸ் உயரதிகாரி கைது
arrest
police
heroin
By Sumithiran
காலி ஹிக்கடுவை மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாரியளவான ஹெரோயின் போதைப் பொருளுடன் களுத்துறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 52 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த உப பொலிஸ் பரிசோதகரை விசாரணைகள் நிறைவடையும் வரையில் தடுப்புக்காவலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை குறித்த உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்