இலங்கை காவல்துறையிடமிருந்து சான்றிதழ் பெறக் காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
இலங்கை காவல்துறையின் சான்றிதழ் தரவுத் தொகுதி (Police Clearance data system) மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, காவல்துறை சான்றிதழ் அறிக்கைகளுக்கான விண்ணப்பங்களை வழக்கமான நிகழ்நிலை முறைமையின் மூலம் மீண்டும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்நிலை முறைமை
குறித்த தரவுத் தொகுதியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாக clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால், தற்காலிக மின்னஞ்சல் முறையைப் பயன்படுத்திய அனைத்து விண்ணப்பதாரர்களும் நிகழ்நிலை முறைமை மூலம் மீண்டும் விண்ணப்பித்து, தேவையான கட்டணங்களைச் செலுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |