காதலியை தரையில் தாக்கி உதைத்த கிளிநொச்சி காவல்துறை உத்தியோகத்தர் பணி நீக்கம்
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Jaso
காதலியை தரையில் உதைத்த கிளிநொச்சியில் பணிபுரியும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் சேவை கடந்த 4ம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி தொடர்பில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் பணி இடைநிறுத்தம் செய்ய கிளிநொச்சி சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பணி இடைநிறுத்தம்

காவல்துறை கான்ஸ்டபிளின் காதலி தனமல்வில ரணவ பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன் சந்தேகமடைந்த காவல்துறை கான்ஸ்டபிள் அவரைச் சென்று பார்த்த போது அவரை தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தனமல்வில காவல்துறையினர் இந்த காவல்துறை கான்ஸ்டபிளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 21 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்