யாழில் சந்தேநபர் ஒருவரின் சொத்துக்களை முடக்கிய காவல்துறை!
யாழில் போதைப்பொருடன் கையான சந்தேகநபர் ஒருவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி காவல்துறையால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இன்று(19.06.2026) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - அரியாலைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி போதைப்பொருளுடன் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
விசேட விசாரணை
அவருடைய சொத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் , சட்டவிரோதமாக ஈட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்குச் சொந்தமான பல சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதன்படி சந்தேகநபருக்கு சொந்தமான டிங்கி படகு, இரண்டு மோட்டார்சைக்கிள்கள், சொகுசுக்கார் மற்றும் கப் ரக வாகனம் என்பனவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |