விலகினார் அமெரிக்கத் துணை ஜனாதிபதி! முடங்கியது ஈரானுடனான பேச்சுவார்த்தை!
சுவிட்சர்லாந்தில் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களுடன் நடைபெறவிருந்த முக்கிய சந்திப்பில் இருந்து அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் விலகியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் எட்டப்பட்ட 14 அம்ச ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அந்த சந்திப்பில் பேசப்படவிருந்தது.
இரு நாட்டு ஜனாதிபதிகளும் ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், ஜெனீவாவில் திட்டமிடப்பட்டிருந்த முறையான கையெழுத்து விழா தேவையற்றது என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
போருக்கு தீர்வு
இதேவேளை, ஒப்பந்தத்திற்கு பின்னர் அமெரிக்காவின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளைக் கண்ட பின்னரே அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.

Image Credit: NPR
மேற்படி இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் மூலம், சுமார் 7,000 பேரைக் கொன்று, உலகளாவிய சந்தைகளை உலுக்கிய ஒரு பிராந்தியப் போருக்கு நீடித்த தீர்வு காண முடியுமா என்ற நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானிய துறைமுகங்கள் மீது விதித்திருந்த கடற்படை முற்றுகையை அமெரிக்கப் படைகள் மீளப் பெற்றுள்ளன.இதனால் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
ஈரானுக்கு அமெரிக்காவின் சலுகைகள்
புதிய விதிமுறைகளின்படி, இந்த நீர்வழிப் பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் ஈரானின் புதிய கண்காணிப்பு அமைப்பிடம் அனுமதி கோர வேண்டும் என்றாலும், அடுத்த 60 நாட்களுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரானின் மீதான பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான கோடி டொலர் மதிப்புள்ள சொத்துக்கள் விடுவிக்கப்படவுள்ளன.
அத்தோடு, ஈரானுக்கு 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புனரமைப்பு நிதியும், எண்ணெய் ஏற்றுமதிக்கான அமெரிக்க விலக்குகளும் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொருபின்னணியில், டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி கூட்டாளிகளே, அவர் ஈரானுக்கு அதிக சலுகைகளை வழங்கிவிட்டதாக விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |