செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்கள் : யாழில் வெடித்த போராட்டம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி பகுதியில் இந்த கண்டனப் போராட்டம் நடைபெறுகின்றது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தரவுள்ள நிலையிலேயே இந்தப் போராட்டம் இடம்பெறுகின்றது.
செம்மணி மனிதப் புதைகுழி அகழவுக்கு சர்வதேச பங்கேற்பை வலியுறுத்தியும், சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தியும், மனிதப் புதைகுழிகளுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் சர்வதேச பொறிமுறையூடான நீதியை கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை போராட்டம் இடம்பெறும் குறித்த பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |