றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் மூன்று நாள் சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலைப் பயிற்சி
இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெற்ற மூன்று நாள் சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலைப் பயிற்சி நெறியின் நிறைவு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை நிபுணர் தனுவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு தொழில்திறன், படைப்பாற்றல் மற்றும் சுயதொழில் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் பிரதம அதிதியாக றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் நிறுவனர் கந்தையா பாஸ்கரன் கலந்து கொண்டு பயிற்சியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், இளைஞர்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்றும், உழைப்பும் விடாமுயற்சியும் வெற்றியின் அடித்தளமாக அமையும் என்றும் வலியுறுத்தினார்.
சமூக முன்னேற்றத்திற்காக இளைஞர்களை சுயதொழில் மற்றும் தன்னிறைவு நோக்கி வழிநடத்தும் இத்தகைய பயிற்சி நிகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியை ஆயிரம் கவிதைகள் நூலின் ஆசிரியர் யோ. புரட்சி தொகுத்து வழங்கினார்.
பயிற்சியின் நோக்கம், தொழில்திறன் மேம்பாட்டின் அவசியம் மற்றும் இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றம் குறித்து அவர் உரையாற்றினார். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், பயிற்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் அழைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இளைஞர்களின் தொழில்திறன் மேம்பாடு, சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு ரீச்சா ஒருங்கிணைந்த பண்ணை தொடர்ச்சியாக பல்வேறு பயிற்சி நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |