கனடாவில் சிறுவனிடம் மோசமாக நடந்த இலங்கையர் கைது
கனடாவில் சிறுவன் ஒருவனை துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வயது சிறுவனை தகாத முறையில் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 62 வயதான இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வந்த சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள்
குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய 16 வயது சிறுவன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் மீது தகாத முறையில் செயற்பட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
இந்நிலையில், குறித்த நபரால் வேறு எவரேனும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டால், அவர்கள் முன்வந்து காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு டர்ஹாம் பிராந்திய காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |