அனோஜனுக்கு மரண தண்டனையைக் குறைத்துக் கருணை வழங்குங்கள்: அட்டனில் போராட்டம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், அவரது மரண தண்டனையைக் குறைத்து கருணை வழங்குமாறு வலியுறுத்தியும் அட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“மனிதாபிமான வேண்டுகோள்” என்ற தொனிப்பொருளில் அட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்புகளின் ஒன்றியத்தினால் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேன்முறையீட்டு விசாரணையிலும் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மனிதாபிமான வேண்டுகோள்
கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஏராளமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது, சிவராசா அனோஜனின் உருவம் தாங்கிய பதாகைகள் மற்றும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பையும் மனிதாபிமானக் கோரிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

