சஷீந்திர ராஜபக்ச உட்பட மூவருக்கு எதிராக குற்றப்பத்திக்கை தாக்கல்!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் செபாலிக சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகியோர் ஏனைய இரு பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
பிரதிவாதிகளுக்கு எதிராக மொத்தம் 10 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இவ்வழக்கு விசாரணைக்காக 30 நபர்கள் சாட்சிகளாக அழைக்கப்பட்டுள்ளதுடன், 38 ஆவணங்கள் சான்றுகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
குற்றச்சாட்டின் பின்னணி
கடந்த 2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் போது, சிறிலங்கா மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான செவனகல, கிரிஇப்பன்வெவ பகுதியில் உள்ள நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்தன.

இதற்காக, சேதங்களுக்கான இழப்பீட்டு அலுவலகத்தில் உள்ள சில அரசாங்க அதிகாரிகளைத் தமது உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரதிவாதிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளனர்.
அதன் மூலம் ரூ. 8,850,000/- (88 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) இழப்பீட்டுத் தொகையை முறைகேடாகப் பெற்றதன் ஊடாக ஊழல் குற்றத்தைச் செய்ததாகவும், அக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளது.
தமிழர்களின் கண்ணீருக்கு பதில் தேடும் PTA- அதிகாரத்தின் ஆயுதம்! காலம் கடந்து குறிவைக்கப்படும் கோட்டாபய
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |