ஷிரான் பாசிக்கின் 2.5 கோடி ரூபாய் பெறுமதியான சொத்து முடக்கம்
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றை முடக்குவதற்கு மத்திய குற்ற விசாரணைப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்ததாகச் சந்தேகிக்கப்படும் குறித்த வீடே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் பெறுமதியான காணியும் மூன்று மாடி வீடும், ஷிரான் பாசிக்கினால் தனது தந்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டு, பின்னர் நன்கொடை உறுதிப்பத்திரம் ஊடாகத் தனது மகளுக்கு மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக்
இதனையடுத்து, குறித்த வீட்டையும் காணியையும் விற்பனை செய்வதையோ அல்லது வேறு நபர்களுக்கு மாற்றுவதையோ தடுக்கும் வகையில், நேற்று (13) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 நாட்களுக்குச் செயலிழக்கச் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான மேலும் பல சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சொத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |