பாரவூர்தியொன்றில் வெடிபொருட்களை கடத்திய இருவர் கைது!
விலத்தவ பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பாரவூர்தியொன்றில் இருந்து வெடிபொருட்கள் சிலவற்றை பிங்கிரிய காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
வீதி சோதனைச் சாவடியில் கடமையாற்றிய காவல்துறையினர் குறித்த பாரவூர்தியை சோதனையிட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் குழாய்களில் பொதி செய்யப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய 89 குழாய்கள், 80 அடி நீளமுள்ள 21 சர்வீஸ் கம்பிகள் மற்றும் தலா 100 டெட்டனேட்டர்கள் அடங்கிய 9 பெட்டிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
மன்னார் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் இன்று (24) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பிங்கிரிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

